வேகமாக மாறும் இந்தியர்கள் ‘சிக்னல்’ நிறுவனர் ஆச்சரியம்

தினமலர்  தினமலர்
வேகமாக மாறும் இந்தியர்கள் ‘சிக்னல்’ நிறுவனர் ஆச்சரியம்

புதுடில்லி:‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வது குறித்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்ததை அடுத்து, ‘சிக்னல்’ எனும் சமூக ஊடகத்தை, மக்கள் அதிகளவில் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

இதுகுறித்து, ‘சிக்னல்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் கூறியதாவது: எங்களுடைய, எளிய மற்றும் நேர்மையான சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகள் காரணமாக, அதிகமானோர், ‘சிக்னல்’ செயலியை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இந்திய சந்தையை பொறுத்தவரை , எங்களது வளர்ச்சி மிகவும் ஆச்சரியம் தரத் தக்கதாக இருக்கிறது.

கடந்த, 72 மணி நேரத்தில், பதிவிறக்கம் மிக வேகமாக இருந்தது.இவ்வாறு கூறினார். பிரையன் ஆக்டன் ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனர்களில் ஒருவர் ஆவார். ‘பேஸ் புக்’ நிறுவனம், ‘வாட்ஸ் ஆப்’செயலியை கையகப்படுத்திய போது, அதை ஏற்காமல், அதிலிருந்து வெளியேறினார்.

கடந்த 2014ல், சிக்னல் செயலியை, மோக்ஸி மார்லின்ஸ்பைக் என்பவருடன் இணைந்து அறிமுகம் செய்தார்.தற்போது, ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம், வாடிக்கையாளர்களுடைய தகவல்களை, விளம்பர வணிகத்துக்காக பகிர்ந்து கொள்ளாது என அறிவித்துள்ளது. ஆனாலும், பிரையன் ஆக்டன், ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் அப்டேட் பாலிசிகள் மிகவும் குழப்பமானவையாக இருக்கும் என்றும்; சாதாரண வாடிக்கையாளர்களால் புரிந்துகொள்வது சிரமமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெலிகிராம்

கடந்த, 72 மணி நேரத்தில் மட்டும், 2.5 கோடி புதிய பயனர்கள் சேர்ந்திருப்பதாக, ‘டெலிகிராம்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவல் துரோவ் தெரிவித்துஉள்ளார். ‘டெலிகிராம்’ செயலி யின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, தற்போது, 50 கோடியை தாண்டியுள்ளது.

மூலக்கதை