இது மாஸ்டர் பொங்கல் டா - கீர்த்தி சுரேஷ்

தினமலர்  தினமலர்
இது மாஸ்டர் பொங்கல் டா  கீர்த்தி சுரேஷ்

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து 'மாஸ்டர்' படம் இன்று வெளியாகி உள்ளது. கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்பு வெளியாகும் பெரிய படம் 'மாஸ்டர்'.

அதனால், படத்திற்கு இன்று அதிகாலை 4 மணி காட்சிகள் பல ஊர்களில் நடைபெற்றது. சென்னையில் ரோகிணி திரையரங்கில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நாயகி மாளவிகா மோகனன், சாந்தனு, மகேந்திரன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்ட பலர் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்தனர்.

விஜய் ஜோடியாக 'பைரவா, சர்க்கார்' ஆகிய படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் சென்னையில் உள்ள வெற்றி தியேட்டரில் அதிகாலை காட்சியில் 'மாஸ்டர்' படத்தைப் பார்த்தார்.

“ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது, எவ்வளவு பரவசமாக இருக்கிறது என்பதை விவரிக்க முடியாது. இதைவிட சிறந்தது என்ன இருக்க முடியும். இது மாஸ்டர் நெருப்பு, இது மாஸ்டர் பொங்கல் டா” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கீர்த்தியின் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளனர்.

மூலக்கதை