சைக்கிளில் படப்பிடிப்புக்கு வரும் ரகுல் பிரீத் சிங்

தினமலர்  தினமலர்
சைக்கிளில் படப்பிடிப்புக்கு வரும் ரகுல் பிரீத் சிங்

தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.. தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருபவர்.. இவரது யோகா பயிற்சி, உடற்பயிற்சி வீடியோக்களும் இணையத்தில் ரொம்பவே பிரபலம். அந்தவகையில் தற்போது தான் நடிக்கும் படப்பிடிப்புக்கே சைக்கிளில் சென்று ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் ரகுல் பிரீத் சிங்.

தற்போது இந்தியில் அஜய் தேவ்கனுடன் 'மே டே' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு தினசரி 12 கிமீ தூரம் சைக்கிளிலேயே சென்று வருகிறார். இதுகுறித்து தான் சைக்கிள் ஓட்டிச்செல்லும் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். போக்குவரத்து குறைவான, ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஏரியா என்பதால், பாதுகாப்புக்கு ஒரு கார் துணை வர, சைக்கிள் ஒட்டியபடி செல்கிறார் ரகுல் பிரீத் சிங்.

மூலக்கதை