மயில்சாமி மகன் நடிக்கும் சிதம்பரம் ரெயில்வே கேட்

தினமலர்  தினமலர்
மயில்சாமி மகன் நடிக்கும் சிதம்பரம் ரெயில்வே கேட்

காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஹீரோவாக நடித்துள்ள படம் சிதம்பரம் ரெயில்வே கேட். அவருடன் மாஸ்டர் மகேந்திரன் இன்னொரு ஹீரோவாக நடித்திருக்கிறார். நீரஜா கதாநாயகியாக நடித்துள்ளார், இரண்டாம் நாயகியாக காயத்ரி நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்பாராயன் நடித்துள்ளார். மேலும் லொள்ளு சபா மனோகர் மற்றும் பிக்பாஸ் டேனியல், ஆகியோர் நடித்துள்ளனர்.

வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார், கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார், இளையராஜா ஒரு பாடல் பாடிக் கொடுத்துள்ளார். கிரௌன் பிக்சர்ஸ் சார்பில் இப்ராஹிம் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற 28ம் தேதி திரைக்கு வருமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை