நேரம், காலம் சீனாவுக்கு சாதகம் அதிபர் ஷீ ஜிங்பிங் இறுமாப்பு

தினமலர்  தினமலர்

பீஜிங்:''உலக நாடுகள் இதுவரை காணாத கொந்தளிப்பான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில், சீனாவுக்கு மட்டும் நேரம், காலம் சாதகமாக உள்ளது,'' என, அந்நாட்டு அதிபர் ஷீ ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.

கடந்த, 1921ல், சீன கம்யூனிஸ்ட் கட்சியை, மாசேதுங் தோற்றுவித்தார். இதன், 100வது ஆண்டு விழாவையொட்டி, பீஜிங்கில், கட்சியின் பொதுக் குழு கூட்டம் நடந்தது. இதில், ஷீ ஜிங்பிங் பேசியதாவது:கடந்த, 100 ஆண்டுகளில், உலக நாடுகள் வரலாறு காணாத வகையில் கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சரக்கு சப்ளை சீராக இல்லை.

மேற்கத்திய நாடுகள் உடனான நல்லுறவு சீர்கெட்டுள்ளது. சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.இத்தனைக்கும் மத்தியில் நமக்கு மட்டும், காலமும், நேரமும் சாதகமாக உள்ளது. அதன் காரணமாகவே, நம் உறுதி, மறு எழுச்சி, அர்ப்பணிப்பு, நம்பிக்கை ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக் காட்ட முடிந்துள்ளது.

ஆளும் சீன கம்யூ., கட்சி, அடுத்த, 30 ஆண்டுகளில், நம் நாட்டை பிரமாண்டமாக எழுச்சி காணச் செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது; இது, நவீன சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவதற்கான நல்ல துவக்கம்.வரும் ஆண்டுகளில், சீன மக்கள் மிகப் பெரிய மாற்றத்தை சந்திக்கப் போகின்றனர். சீனா, மிக வலிமையுள்ள, பணக்கார நாடாக மாறும்.அதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் முழு வேகத்தில் செயல்படுத்தப்படும்.

ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிக்கு பதிலாக, உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நவீன சோஷலிச நாடாக, சீனா உருவெடுக்கும்.இவ்வாறு, அவர் பேசினார். சீனாவின் வூஹான் நகரில் தான், கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றி, உலகளவில் பரவியது.

மூலக்கதை