ட்வீட் கார்னர்... ஆபரேஷன் சக்சஸ்!

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்... ஆபரேஷன் சக்சஸ்!

இந்திய அணி ஆல் ரவுண்டர் ஜடேஜா சிட்னி டெஸ்டில் பேட் செய்தபோது அவரது இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிரிஸ்பேனில் நடக்க உள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ‘இப்போதைக்கு விளையாடும் வாய்ப்பு இல்லை. அறுவை சிகிச்சை முடிந்தது. ஆனால், விரைவில் களமிறங்கி கலக்குவேன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ள ஜடேஜா, கையில் கட்டுடன் இருக்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய பிசிசிஐ வாழ்த்து தெரிவித்துள்ளது.

மூலக்கதை