வூஹான் நகருக்கு ஜன.14 -ல் உலக சுகாதார குழு வருகை

தினமலர்  தினமலர்
வூஹான் நகருக்கு ஜன.14 ல் உலக சுகாதார குழு வருகை

பீஜிங் : கொரோனா முதலில் பரவிய, சீனாவின் வூஹான் நகருக்கு, உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு, நாளை செல்கிறது.

நம் அண்டை நாடான சீனாவின், ஹுபெய் மாகாண தலைநகரான வூஹானில், 2019ம் ஆண்டு, டிச., 31ல், முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.


இதன் பின், உலக நாடுகள் பலவற்றுக்கும் தொற்று பரவியது. சீனாவின் ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என, அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. சீனா, இதனை மறுத்து வருகிறது.இந்நிலையில், உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, வூஹான் நகருக்கு, 14ம் தேதி வர இருப்பதாக, சீனா தெரிவித்துள்ளது.

மூலக்கதை