ஜடேஜாவுக்கு ஆப்பரேஷன் | ஜனவரி 12, 2021

தினமலர்  தினமலர்
ஜடேஜாவுக்கு ஆப்பரேஷன் | ஜனவரி 12, 2021

சிட்னி: ஜடேஜா இடது கை பெருவிரலில் ஆப்பரேஷன் செய்யப்பட்டது.

இந்திய அணி சுழற்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா. ஆஸ்திரேலிய தொடரில் இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் பந்து ‘ெஹல்மெட்டில்’ தாக்க, மன அதிர்ச்சி காரணமாக 3வது ‘டுவென்டி–20’, மற்றும் அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்டில் பங்கேற்கவில்லை.

மெல்போர்ன் டெஸ்டில் களமிறங்கிய இவர் 3 விக்கெட் வீழ்த்தினார். சிட்னி டெஸ்டில் அசத்திய ஜடேஜா முதல்  இன்னிங்சில் 4 விக்கெட் சாய்த்தார். தவிர ஸ்மித்தை, தனது துல்லிய ‘த்ரோவினால்’ அவுட்டாக்கினார். 

பின் பேட்டிங் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து (98.5 வது ஓவர்) ஜடேஜா, இடது கை பெருவிரலில் தாக்கியது. மனம் தளராமல் பேட்டிங்கை தொடர்ந்த இவர் 28 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இரண்டாவது இன்னிங்சில் தேவைப்பட்டால் களமிறங்கலாம் என தயாராக இருந்தார். 

தற்போது இவரது பெருவிரலில் ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. இவர், சக அணி வீரர்களுடன் பிரிஸ்பேன் செல்லாமல், இந்தியா திரும்புகிறார். இங்கு பெங்களூரு சென்று தேவையான பயிற்சியில் ஈடுபட உள்ளார். 

இதற்கான போட்டோவை ‘டுவிட்டரில்’ வெளியிட்டார் ஜடேஜா. அதில்,‘ஆப்பரேஷன் முடிந்தது. இப்போதைக்கு சிறிது நாட்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாது. விரைவில் சிறப்பான முறையில் மீண்டு வருவேன்,’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை