உலக கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இந்திய நிறுவனம்

தினமலர்  தினமலர்
உலக கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இந்திய நிறுவனம்

புதுடில்லி:குளிர்பான நிறுவனமான, ‘பெப்சிகோ’ உலகளவில் வளர்ந்து வரும், 10 கண்டுபிடிப்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த, 10 நிறுவனங்களில், இந்தியாவின், ‘பயோஸ்டைன் லேப்ஸ்’ எனும் நிறுவனமும் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த, பயோசஸ்டைன் லேப்ஸ் தவிர, ஐரோப்பாவைச் சேர்ந்த, ஐந்து நிறுவனங்களும்; அமெரிக்காவைச் சேர்ந்த, நான்கு நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த, 10 நிறுவனங்களும், தலா, 20 ஆயிரம் டாலர் அதாவது, 14.65 லட்சம் ரூபாய் மற்றும் பெப்சிகோ நிறுவன வல்லுனர்களின் தனிப்பட்ட வழிகாட்டும் உதவி ஆகியவற்றை பெறும்.இந்த வல்லுனர்கள் வணிக மாதிரி மேம்பாடு, தொழில்நுட்பம் மற்றும் சந்தைக்குச் செல்லும் உத்தி உள்ளிட்ட பல்வேறு வணிக சவால்களை தீர்க்க உதவுவர்.

மேலும், ஜூன் மாதத்தில் கூடுதலாக, 73 லட்சம் ரூபாய் நிதியுதவியும் இந்த நிறுவனங்கள் பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை