கோஹ்லி வீட்டில் ‘தேவதை’ * மகள் பிறந்த உற்சாகம் | ஜனவரி 11, 2021

தினமலர்  தினமலர்
கோஹ்லி வீட்டில் ‘தேவதை’ * மகள் பிறந்த உற்சாகம் | ஜனவரி 11, 2021

மும்பை: கோஹ்லி மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி 31. மனைவி அனுஷ்கா சர்மாவின் பிரசவத்திற்காக முதல் டெஸ்ட் முடிந்ததும் ஆஸ்திரேலியாவில் இருந்து தாயகம் திரும்பினார். நேற்று மதியம் அனுஷ்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

கோஹ்லி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘பெண் குழந்தை பிறந்த  செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. உங்களது அன்பு, பிரார்த்தனை, வாழ்த்துக்களுக்கு நன்றி. அனுஷ்கா, குழந்தை என இருவரும் நலமாக உள்ளனர். எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளதாக உணர்கிறோம்.  தனிப்பட்ட வாழ்க்கைக்கு எல்லோரும் மரியாதை  தருவீர்கள் என நம்புகிறோம்,’என தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகைகள் பரினீத்தி சோப்ரா, பிரியங்கா சோப்ரா, அலியா பட் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை