கீழடி அகழாய்வு தொடர மத்திய அரசு அனுமதி

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கீழடி அகழாய்வு தொடர மத்திய அரசு அனுமதி

கீழடி அகழாய்வு தொடர மத்திய அரசு அனுமதி

    தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வுகள் மூலம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆற்றங்கரை நாகரிகம் இருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி, சிவகளை, கொடுமணல், மயிலாடும் பாறை, கொற்கை, கங்கைகொண்ட சோழபுரம் போன்ற இடங்களில் தொடர்ந்து அகழாய்வை நடத்தத் தமிழக தொல்லியல் துறை மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. ஆனால் அந்த விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் தான் இருக்கிறது. எனவே இப்பகுதிகளில் தொல்லியல் தொடரவும், வைகை, தாமிரபரணி போன்ற ஆற்றங்கரை பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும் என்று காமராஜ் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டிருந்தது. மனுவை நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். ஜெனரல் விக்டோரியா கவுரி ஆஜராகி, ‘தமிழகத்திலுள்ள ஆதிச்சநல்லூர், கீழடி, சிவகளை, கொடுமணல், மயிலாடும்பாறை, கொற்கை, கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழக அரசு சார்பில் செப்டம்பர் 2021வரை அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது’ என்றார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை முத்து வைத்தனர்.

மூலக்கதை