இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால், தொற்று அதிகமுள்ள பகுதிகளில்  கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   எனினும் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுடங்காமல் பரவியதால், இங்கிலாந்து  தடுமாறியது. ஒருபக்கம் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு புறம்  வைரஸ் பரவல் வேகமாக உள்ளது.

 
இதையடுத்து,  இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

 இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும். நாளை முதல்  பள்ளிகள்  மூடப்படும்.

இங்கிலாந்து மக்கள் பத்திரமாக தங்கள் குடியிருப்பிலேயே இருக்க வேண்டும். நாட்டில் அமலுக்கு வரும் இந்த ஊரடங்கு புதிய வகை கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும்.

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள  ஊரடங்கானது கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை அமல்படுத்தப்பட்டது போல் மிக கடுமையானதாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

.

மூலக்கதை