தமிழர்களில் தலைசிறந்த இந்தியவியல் ஆராய்ச்சியாளர்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழர்களில் தலைசிறந்த இந்தியவியல் ஆராய்ச்சியாளர்!

தமிழர்களில் தலைசிறந்த இந்தியவியல் ஆராய்ச்சியாளர்! முனைவர் பழனியப்பனின் குறிப்புகளையும், கருத்துகளையும் 25 ஆண்டுகளுக்கும் மேல் இணையக்குழுக்களில் படித்திருந்தாலும், 2005-2006 காலகட்டத்தில்தான் அவருடைய ஆராய்ச்சியைப் பற்றி அறியவந்தேன்.   ”சங்ககாலத்தில் பிறப்பின் அடிப்படையிலான சாதிகள் இருந்ததில்லை” என்ற அறிவியற்சான்றுகள் செறிந்த அவருடைய ஆய்வுக்கட்டுரையைப் படித்தபின்னால் அவரது ஆய்வுக்கட்டுரைகள் மீதும், அவர் நிறுவி நடத்திவரும் SARII அமைப்பு மீதும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அவர் ஆண்டுதோறும் டல்லஸ் நகரில் நடத்தி வந்த ஆய்வுக்கருத்தரங்கங்களிலும் சில ஆண்டுகள் கலந்துகொண்டேன். பரதநாட்டியம் மற்றும் இந்திய நடனங்களின் வரலாறு பற்றிய அவருடைய ஆராய்ச்சியும் என்னைக் கவர்ந்த ஒன்று. என்னுடைய மகள் மாதவியின் பரதநாட்டிய அரங்கேற்றத்துக்கு அவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். SARII அமைப்புக்கு அரங்கேற்றத்துக்கு வந்திருந்த விருந்தினர்கள் 4300 வெள்ளிகளுக்கும் மேலாக மனமுவந்து நன்கொடையாக அளித்தனர்.   முனைவர் பழனியப்பன் அடிப்படையில் ஒரு பொறியியல் ஆராய்ச்சியாளர். சென்னை ஐஐடியில் பி.டெக் முடித்தபின் அமெரிக்கா குடிபெயர்ந்தவர். அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும், புகழ்பெற்ற வார்ட்டன் மேலாண்மைத் துறையில் எம்பிஏ பட்டமும் பெற்றவர். ஆனால் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தென்னாசியவியல் நூலகத்திலுள்ள நூல்களை எடுத்துப் படிக்கத் தொடங்கியபின் தென்னாசிய வரலாற்றில் ஆர்வம் கொண்டு அத்துறையில் தன்னிச்சையாகவே ஆராய்ச்சியைத் தொடங்கி டல்லஸ் நகரில் SARII என்ற அமைப்பை நிறுவினார்.   இன்றைக்கு இந்தியவியலில் அறிவியற் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்ச்சி என்பது மிகவும் குறைவு. இந்தியப் பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் குப்பைகளைத்தான் ஆராய்ச்சி என்கிற பெயரில் அடுக்கிக்கொண்டு போகின்றன. இந்தியவியல், தமிழியல் ஆய்வுகளில் அறிவியல் ஆராய்ச்சி முறையைப் பயன்படுத்துபவர்கள் மிகக் குறைவு. என்னைப் பொறுத்தவரை முனைவர் பழனியப்பனின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை/ கருத்துகளைப் படித்திருக்கிறேன், போற்றுகிறேன். ஹார்வர்டு, சிகாகோ, போன்ற பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி அறிஞர்கள் அவர்களுடைய முடிபுகளை இந்தியவியல் குழுக்களில் ஏற்றும், ஆதரித்தும் எழுதிய பல கருத்துகளைப் படித்திருக்கிறேன்.   முனைவர் பழனியப்பன் வேறு முழுநேர வேலையில் இருந்துகொண்டு தன்முனைப்பால் மட்டுமே அறிவியல் துறை ஆய்வு முறைகளை போல் இதைச் செய்துவருகின்றனர்.

மூலக்கதை