தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி ேபாட்டுக் கொண்டார். இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட  கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது.

புள்ளிவிவரங்கள் படி கடந்த 24 மணி நேரத்தில் 53,135 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.   இங்கிலாந்தில் 71,100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

தலைநகர் லண்டனில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு மொத்தமாக முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வகை வைரஸ் பரவி வரும்நிலையில், அங்கு நிலைமை மோசமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

வாஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில் முதல் டோசை போட்டுக் கொண்டார். மேலும், கமலா ஹாரிசின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார்.

அனைத்து அமெரிக்க மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க இன்னும் சில மாதங்களாகலாம் என்ற போதும், தலைவர்கள் முதற்கட்டமாக தடுப்பூசியை போட்டுக் கொள்கின்றனர்.

தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட ஏற்கனவே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனும் கடந்த சில நாட்களுக்கு முன் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை