ஜல்லிக்கட்டு நடத்தலாம்… மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சி…

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ஜல்லிக்கட்டு நடத்தலாம்… மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சி…

ஜல்லிக்கட்டு நடத்தலாம்… மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சி…

கொரோனாத் தொற்று பரவி வருகிற இக்காலத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு காளையுடன் உரிமையாளர், ஒரு உதவியாளருக்கு மட்டுமே அடையாள அட்டையுடன் அனுமதி வழங்கப்படும். 50 சதவீத பார்வையாளர்கள், 50 சதவீத மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வதற்கு மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். காளையுடன் வருபவர்கள், மாடுபிடி வீரர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். வரும் பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தனிமனித இடைவெளியைப் பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டும். இந்த கொரோனா காலத்தில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்ற தமிழக அரசின் இந்த அறிவிப்பு மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமில்லாமல் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை