அமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்கஇந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது

வாஷிங்டன்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ. பிரையன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க - இந்திய உறவை மேம்படுத்தியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘லெஜியன் ஆஃப்  மெரிட்’ என்ற விருதை வழங்கி உள்ளார். இதனை அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து, பிரதமர் மோடி சார்பில் வெள்ளை மாளிகையில் விருதை ஏற்றுக்கொண்டார்’ என்று தெரிவித்துள்ளார்.



இவரது மற்றொரு டுவிட்டில், ‘ஆஸ்திரேலிய பிரதமர்  ஸ்காட் மோரிசன், முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருக்கு  லெஜியன் ஆஃப் மெரிட்டை அதிபர் டிரம்ப் வழங்கினார். இந்த விருதுகளை  வாஷிங்டன் டி. சி. யில் உள்ள அந்தந்த தூதர்கள் பெற்றனர்.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதிலும், கூட்டு பாதுகாப்பை  மேம்படுத்துவதிலும் தலைமை வகித்ததற்காக இருவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

‘லெஜியன் ஆஃப் மெரிட்’ விருது அமெரிக்காவின் சிறந்த மாகாண தலைவர், சர்வதேச சிறந்த தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

உலகளாவிய சக்தியாக இந்தியாவை பிரதமர் மோடி முன்ெனடுத்ததற்காகவும், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை மேம்படுத்தியதற்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை