வில்லியம்சன் இரட்டை சதம் * 519 ரன்கள் குவித்தது நியூசி., | டிசம்பர் 04, 2020

தினமலர்  தினமலர்
வில்லியம்சன் இரட்டை சதம் * 519 ரன்கள் குவித்தது நியூசி., | டிசம்பர் 04, 2020

 

ஹாமில்டன்: விண்டீஸ் அணிக்கு எதிரான் முதல் டெஸ்ட், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 519 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் 251 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து சென்ற விண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஹாமில்டனில் நடக்கிறது.

முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்திருந்தது.

வில்லியம்சன் (97), ராஸ் டெய்லர் (31) அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ராஸ் டெய்லர் 38 ரன்னுக்கு அவுட்டானார். நிகோல்ஸ் (7), பிளன்டல் (14), மிட்சல் (9) சீரான இடைவெளியில் திரும்பினர். மறுமுனையில் அசத்திய கேப்டன் வில்லியம்சன், டெஸ்ட் அரங்கில் மூன்றாவது இரட்டை சதம் விளாசினார்.

அபாரமாக ஆடிய இவர், 251 ரன்னுக்கு அவுட்டானார். வேகமாக ரன்கள் சேர்த்த ஜெமிசன் அரைசதம் எட்டினார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 519 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜெமிசன் (51), சவுத்தீ (11) அவுட்டாகாமல் இருந்தனர். விண்டீஸ் சார்பில் கேபிரியல், கீமர் ரோச் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அடுத்து களமிறங்கிய விண்டீஸ் அணி இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து, 470 ரன்கள் பின்தங்கியிருந்தது. பிராத்வைட் (20), கேம்பெல் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

மூலக்கதை