பதவி ஏற்பு விழாவுக்கு டிரம்பை அழைக்க ஜோ பைடன் முடிவு..!

தினமலர்  தினமலர்
பதவி ஏற்பு விழாவுக்கு டிரம்பை அழைக்க ஜோ பைடன் முடிவு..!

வாஷிங்டன்: 2021 ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். இதற்கு ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி தலைவர்களுக்கு பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் தனக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் எந்த பகையும் இல்லை என்றும் கொள்கை ரீதியாகவே தாங்கள் மோதிக் கொள்வதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார். இதனால் பதவியேற்பு விழாவுக்கு டொனால்ட் ட்ரம்புக்கு வரவேற்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டார். இதனை அடுத்து டிவிட்டர் நிறுவனம் இது ஆதாரமற்ற பதிவு என்று அறிவித்தது. கடைசிவரை தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறாமல் தனது வழக்கறிஞர்கள் மூலமாக போராடிய டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில்தான் தனது தோல்வியை ஏற்பதாக ஆட்சி மாற்ற குழுவிடம் தெரிவித்தார்.


இந்நிலையில் ஜோ பைடன் டொனால்ட் ட்ரம்பை பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்க முடிவெடுத்திருப்பது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை