ஆப்கன் வீரருக்கு ‘கொரோனா’ | டிசம்பர் 04, 2020

தினமலர்  தினமலர்
ஆப்கன் வீரருக்கு ‘கொரோனா’ | டிசம்பர் 04, 2020

கோல்டு கோஸ்ட்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஜீப் உர் ரஹ்மானுக்கு ‘கொரோனா’ தொற்று உறுதியானது.

ஆப்கானிஸ்தான் ‘சுழல்’ வீரர் முஜீப் உர் ரஹ்மா 19. ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ பவுலர்களுக்கான தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள இவர், ஆஸ்திரேலியாவில் நடக்கும் ‘பிக் பாஷ் லீக்’ தொடருக்கு பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஒப்பந்தமானார். வரும் டிச. 10ல் துவங்கவுள்ள இத்தொடரில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் முஜீப் உர் ரஹ்மான் ஆஸ்திரேலியா வந்தார். ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ‘கொரோனா’ தொற்று கண்டறியப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இவர், பிரிஸ்பேன் ஹீட் அணி விளையாட உள்ள முதலிரண்டு போட்டியில் (டிச. 11, 14) பங்கேற்பது சந்தேகம்.

மூலக்கதை