4 நாட்களுக்கு பின்பு தங்கம் விலை சவரனுக்கு 48 குறைவு

தினகரன்  தினகரன்
4 நாட்களுக்கு பின்பு தங்கம் விலை சவரனுக்கு 48 குறைவு

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 48 குறைந்து, 37,200 ஆக விற்பனை செய்யப்பட்டது. 4 நாட்களுக்கு பின்பு விலை சற்று குறைந்தது.  தீபாவளி பண்டிகைக்கு முன்பு வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உச்சத்தை தொட்டது.  அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்தது. கடந்த மாதம் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் தங்கம் வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  தங்கம் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்த்த  நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து உயர்ந்து வந்ததால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்தனர்.  நேற்று முன்தினம் காலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு 30ம், சவரனுக்கு 240ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 4,641க்கும், ஒரு சவரன் தங்கம் 37,128க்கும், தொடர்ந்து மாலையில் மீண்டும் கிராமுக்கு 45 விலை உயர்ந்து, சவரனுக்கு 360 உயர்ந்து, ஒரு கிராம் 4,656க்கும், ஒரு சவரன்  37,248க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று காலை தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாத நிலையில், மாலை தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது, கிராமுக்கு 6 குறைந்தது. சவரனுக்கு 48 குறைந்தது ஒரு கிராம்  4,650க்கும், ஒரு சவரன் 37,200க்கும் விற்பனையானது. ‘தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்று மாலை தங்கம் விலை சற்று குறைந்திருப்பது நகை வாங்குவோருக்கு ஆறுதலை தந்துள்ளது.

மூலக்கதை