முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி

வாஷிங்டன்:அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிஸ், தன் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய பதவி களுக்கு, பெண்களைநியமித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்த லில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜன., 20ல், ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவியேற்க உள்ளனர்.இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட முக்கிய பதவி களுக்கு, பெண்களை தேர்வு செய்துள்ளார், கமலா ஹாரிஸ்.
இது பற்றி அவர் கூறியதாவது:என் அலுவலகத்தின் தலைமை அதிகாரியாக, டினா பிளோர்னேவையும், என் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, நான்சி மெக்டோல்வினியையும், உள்நாட்டு கொள்கை ஆலோசகராக, ரோகினி கோசோக்லுவை நியமித்துஉள்ளேன். என் குழுவில் உள்ள மற்றவர்களுடன், இவர்கள் மூவரும் இணைந்து, கொரோனா கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுப்பர்.இவ்வாறு, அவர் கூறினார்.
விவேக் மூர்த்திக்கு மீண்டும் பதவி
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, குழு ஒன்றை நியமித்துள்ளார். இந்த குழுவின் துணைத் தலைவர்களில் ஒருவராக இடம் பெற்றுள்ளவர், டாக்டர் விவேக் மூர்த்தி, 43. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது, மருத்துவ சேவைப் பிரிவின் தலைவராக பணியாற்றினார். அதிபராக டிரம்ப் பதவியேற்றபின், விவேக் மூர்த்தி பதவி விலகினார்.
இந்நிலையில், டாக்டர் விவேக் மூர்த்தி யை, அமெரிக்க மருத்துவ சேவைப் பிரிவின் தலைவராக, ஜோ பைடன் மீண்டும் நியமித்துள்ளார். சுகாதாரம் தொடர்பான விஷயங்களில், அரசுக்கு இவர் தான் ஆலோசனை வழங்குவார்.
மூலக்கதை
