புரெவி புயலால் ராமேஸ்வரத்தில் தொடர் மழை - 3 நாட்களாக மின்சாரம் துண்டிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தினகரன்  தினகரன்
புரெவி புயலால் ராமேஸ்வரத்தில் தொடர் மழை  3 நாட்களாக மின்சாரம் துண்டிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ராமேஸ்வரம்: புரெவி புயலால் ராமேஸ்வரத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. 3 நாட்களாக மின்சாரம் துண்டிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புரெவி புயல் வலுவிழந்த போதிலும் மின்சாரம் வழங்கப்படாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் மின்சாரம் துண்டிப்பால் 3 நாட்களாக ராமேஸ்வரம் தீவு இருளில் மூழ்கியுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து கிடக்கின்றன. 1964ம் ஆண்டு புயலில் சேதம் அடைந்த தனுஷ்கோடி தேவாலய சுவர் கடல் சீற்றத்தால் முற்றிலும் இடிந்து விழுந்தது. ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்வதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வலுவிழந்த புரெவி புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ராமநாதபுரம் - கன்னியாகுமரி இடையே இன்று இரவு கரையை கடக்க வாய்ப்புள்ளது.

மூலக்கதை