'கோலமாவு கோகிலா' ஹிந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர்

தினமலர்  தினமலர்
கோலமாவு கோகிலா ஹிந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர்

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், நயன்தாரா, யோகிபாபு மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'கோலமாவு கோகிலா'.

இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். தனுஷை ஹிந்தியில் 'ராஞ்சனா' படம் மூலம் அறிமுகப்படுத்தி, தற்போது மீண்டும் தனுஷ் நாயகனாக நடிக்கும் 'அத்ராங்கி ரே' படத்தை இயக்கி வரும் ஹிந்தி இயக்குனரான ஆனந்த் எல் ராய் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

'ஓயே லக்கி, லக்கி ஓயே,' 'அக்னிபாத்' ஆகிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சித்தார்த் சென்குப்தா இப்படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தில் ஜனவரி மாதம் ஆரம்பமாக உள்ளது. தொடர்ந்து ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்தி ஒரே கட்டமாக முடிக்க உள்ளார்களாம்.

தமிழைப் போலவே ஹிந்தியிலும் இப்படம் வரவேற்பைப் பெறும் என படக்குழுவினர் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

மூலக்கதை