ஹாலிவுட் படத்துக்காக லண்டன் பறந்த பஹத் பாசில் நாயகி

தினமலர்  தினமலர்
ஹாலிவுட் படத்துக்காக லண்டன் பறந்த பஹத் பாசில் நாயகி

மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற படம் தொண்டிமுதலும் திரிக்சாட்சியும். இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிமிஷா சஜயன்.. கடந்த வருடம் வெளியான 'சொள' என்கிற படத்தில் பள்ளி மாணவியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியவர்.. இரண்டு வருடங்களில் கேரள அரசு விருது உட்பட ஏழெட்டு விருதுகளை கைப்பற்றிவிட்டார். பஹத் பாசில் ஜோடியாக இவர் நடித்துள்ள மாலிக் என்கிற படம் ரிலேசுகு தயாராக உள்ளது.

இந்தநிலையில் தான் இவருக்கு ஹாலிவுட்டில் தயாராகும் 'புட் பிரிண்ட்ஸ் இன் வாட்டர்' என்கிற படத்தில் வாய்ப்பு கிடைக்கவே, தற்போது படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக லண்டன் பறந்துள்ளார் நிமிஷா. இந்தப்படத்தை நதாலியா ஷ்யாம் என்கிற பெண் இயக்குனர் இயக்க அவரது சகோதரியான நீட்டா ஷ்யாம் என்பவர் இதன் கதையை எழுதியுள்ளார்..

மூலக்கதை