மாநில தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க தயார்; இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

தினகரன்  தினகரன்
மாநில தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க தயார்; இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: தமிழக சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க தயார் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்களை வாக்களிக்க வகைசெய்ய இயலுமா என சட்ட அமைச்சகம் கேட்டதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை வாக்களிக்க வைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. இதற்காக பல்வேறு வகையான ஆலோசனைகளை மத்திய சட்ட அமைச்சகமும், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் நடத்தி வந்தன. இதுதொடர்பாக புதிய சட்டம் கொண்டு வருவதற்காக மத்திய சட்ட அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது. இந்திய தேர்தல்களை நடத்துவதற்கான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ள மத்திய சட்ட அமைச்சகம் வெளிநாடுவாழ் இந்தியர்களை வாக்களிக்க வகைசெய்ய இயலுமா என கேள்வி எழுப்பியது. இந்நிலையில் இதுகுறித்து பதில் அளித்த தேர்தல் ஆணையம்,; வெளிநாடுவாழ் இந்தியர்களை இந்திய தேர்தல்களில் வாக்களிக்க வைப்பது சாத்தியம் தான், அதற்கான வழிமுறைகள் தங்களிடம் உள்ளது என தெரிவித்துள்ளது. வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலிலேயே அதனை அமல்படுத்த தயாராக இருக்கிறோம். தமிழகத்துடன் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கும் இதனை செயல்படுத்த தயராக உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் இது சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை