வைகுண்ட ஏகாதசியையொட்டி முன்னிட்டு திருப்பதியில் டிச. 25 முதல் ஜன. 3-ம் தேதி வரை சொர்க்க வாசல் திறக்கப்படும்: இன்று முதல் ஆன்லைனில் தரிசன டிக்கெட்

தினகரன்  தினகரன்
வைகுண்ட ஏகாதசியையொட்டி முன்னிட்டு திருப்பதியில் டிச. 25 முதல் ஜன. 3ம் தேதி வரை சொர்க்க வாசல் திறக்கப்படும்: இன்று முதல் ஆன்லைனில் தரிசன டிக்கெட்

திருமலை: வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்காக பத்து நாட்கள் சொர்க்க வாசலை திறக்க அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் குழு தலைவர் ஓய்.வி.சுப்பா ரெட்டி கூறினார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்து இருக்கும் என தெரிவித்தார். எப்போதும் வழக்கமாக ஆண்டுதோறும் பக்தர்கள் வருகையை ஒட்டி இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் திறந்த நிலையில் இந்த ஆண்டு 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். கொரோனா தொற்று அதிகம் உள்ள காரணத்தால் பக்தர்கள் குறைந்த அளவில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதால் 10 நாட்கள் சொர்க்க வாசல் திறக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். மேலும் சொர்க்க வாசலுக்கான தரிசன டிக்கெட்கள் திருமலை திருப்பதி தேவஸ்தாக இணையத்தளத்தில் இன்று முதல் விற்பனை செய்யப்பட உள்ளது என தெரிவித்தார். மேலும் பக்தர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அதற்கான நகலை கொண்டு வர வேண்டும் என கூறினார். மார்கழி மாதம் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமர்ச்சியாக கொண்டாடப்படும் விழா ஆகும். திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் கொடிமரம், பலிபீடம், மகா துவாரத்திற்கு தங்க தகடுகள் பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் மலைப்பாதையில் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக நிழல் பந்தல் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தானம் குழு தலைவர் கூறினார்.

மூலக்கதை