ஊழலுக்கு எதிரான நிருபர் கொலை: இன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் '

தினமலர்  தினமலர்
ஊழலுக்கு எதிரான நிருபர் கொலை: இன்றைய  கிரைம் ரவுண்ட் அப்

01. உ.பி., மாநிலம் லக்னோவில் உள்ள ராஷ்ட்டிரிய ஸ்வரூப் என்ற பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வந்தவர் ராகேஷ்சிங். இவரை சிலர் முன்விரோதம் காரணமாக சானிடைசர் ஊற்றி தீ வைத்து கொன்றனர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழலுக்கு எதிரான நிருபர், செய்தி வெளியிட்டு வந்த ஆத்திரத்தில் இந்தக்கொலை நடந்திருப்பதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.



02. மஹாராஷ்ட்டிராவின் புனேயில் இருந்து அகம்மதுநகருக்கு காரில் சென்று கொண்டிருந்த தேசியவாத காங்கிரஸ் மகளிர் அணியை சேர்ந்த ரேகாபவ்சாகேப் என்பவைரை மோட்டார் பைக்கில் வந்த 2பேர் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றனர்.

03. மேற்குவங்க மாநிலம் அலிபோரில் தந்தை கண்முன்னே மகள் பலாத்காரம் செய்யப்பட்டார். தட்டிக்கேட்ட தந்தைக்கும் அடி விழுந்தது. குற்றவாளிகள் 6 பேர் தப்பினர்,.

04. மும்பையில் டிவி நடிகையை ஆசை வார்த்தை பேசி 2 வருடமாக உல்லாசமாக இருந்த இயக்குநர் திருமணம் செய்ய மறுத்தார். இதனையடுத்து நடிகை அளித்த புகாரின் பேரில் கற்பழிப்பு வழக்கை போலீசார் பதிவு செய்தனர்.

தமிழக நிகழ்வு


01. சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமி பலாத்கார வழக்கில் சாக்குமூட்டை வியாபாரியும், தனியார் தொலைக்காட்சி நிருபருமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.02. ராணிப்பேட்டை - ஆற்காடு ரோட்டில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் காயமுற்றனர்.

உலக நடப்பு



01. ஈரானில் அணுஆயுத விஞ்ஞானி பக்ரிஷாதேவ் கொல்லப்பட்டதில் இஸ்ரேல் பங்கு இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டி உள்ளது. நேரடியாக சிலர் துப்பாக்கியால் சுட்டதாகவும், ரிமோட் மூலம் சுட்டு இருக்கலாம் என்றும் அந்நாட்டு பத்திரிகை தெரிவிக்கிறது.

மூலக்கதை