சீனா - ஆஸ்திரேலியா பனிப்போர் உச்சம்!

தினமலர்  தினமலர்
சீனா  ஆஸ்திரேலியா பனிப்போர் உச்சம்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவை அவமதிக்கும் வகையில், டுவிட்டரில் படம் வெளியிட்ட சீனா, மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் உள்ள, ஆஸ்திரேலிய படை வீரர் ஒருவர், ஒரு குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்திருப்பது போன்ற படத்தை, சீனா 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள, ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன், ' அரசியல் பழி தீர்க்க, போலியாக படத்தை உருவாக்கி, வெளியிட்ட சீனா மன்னிப்பு கேட்பதுடன், டுவிட்டர் படத்தை நீக்க வேண்டும்,'' என வலியுறுத்தியுள்ளார்.


அதை ஏற்க மறுத்துள்ள சீனா, ' ஆஸி., செய்தது அசிங்கமான செயல்' என, தெரிவித்துள்ளது. இதனால், சீனா - ஆஸி., பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளது.

மூலக்கதை