வெளியே வந்து பாருங்க: ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி

தினமலர்  தினமலர்
வெளியே வந்து பாருங்க: ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி

சென்னை: ''மக்களை வந்து பார்த்தால் தான், அரசு செயல்படுத்தும் திட்டங்கள், அதனால், மக்கள் அடைந்த நன்மைகள் தெரியும்,'' என, ஸ்டாலினுக்கு முதல்வர் இ.பி.எஸ்., பதில் அளித்தார்.
அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னை மேயராக இருந்த போதும், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போதும், துாங்கி விட்டாரா? அவர் நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம், நாங்கள் தான் நிறைவேற்றி வருகிறோம்.பாராட்ட மனம் இல்லாவிட்டாலும், பழி சுமத்தாமல் இருந்தாலே போதும். அவர், 'இந்த ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை' என்கிறார். துறை வாரியாக விருதுகளை பெற்றுள்ளோம். அரசு சிறப்பாக செயல்பட்டதால் தான், விருதுகளை பெற முடிந்தது.

அவர் வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். நாட்டு மக்களை வந்து பார்த்தால் தான், என்ன திட்டம் நிறைவேற்றுகிறோம் என்று தெரியும். வீட்டிலிருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, கட்சியினரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அங்கே கூட, 'கூலிங் கிளாஸ்' மற்றும் கைக்கு உறை போட்டு பேசுகிறார். அப்படிப்பட்டவர்களுக்கு, அரசு செயல்படுத்தும் திட்டங்கள் தெரியாது.வெளியில் வந்து மக்களை பார்த்தால் தான், அரசு என்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளது; அதனால், மக்கள் என்ன நன்மை அடைந்துள்ளனர் என்ற, விபரம் தெரியும். அவற்றை தெரிந்து, அவர் பேசினால், நன்றாக இருக்கும்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.

மூலக்கதை