மரக்கன்று நட்டு பிறந்தநாள் கொண்டாடிய ராஷி கண்ணா

தினமலர்  தினமலர்

அடங்கமறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ராஷி கண்ணா. தற்போது மேதாவி, துக்ளக் தர்பார் மற்றும் அரண்மனை -3 என கைவசம் நிறைய படங்களை வைத்துள்ள ராஷி கண்ணா, தற்போது மாறிமாறி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய ராஷி கண்ணா, அருகில் இருந்த பள்ளிக்கு சென்று பிறந்தநாள் ஞாபகார்த்தமாக அங்கே மரக்கன்றுகளை நட்டார்.




இதுபற்றி அவர் கூறும்போது, “நாம் பிறந்தநாளின்போது மட்டும் மரக்கன்றுகளை நடுவதை கடமையாக செய்யாமல், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மரக்கன்றுகளை நட வேண்டும். மரம் நடுவதற்கு சிறிய அளவிலாவது தூண்டுகோலாக இருப்பதில் எனக்கு சந்தோஷமே” என கூறியுள்ளார்.

மூலக்கதை