வெளிநாடு வாழ் தமிழர்கள் தாய் மொழியையும் தலைமுறை பெருமையையும் வளர்க்கிறார்களா? பன்னாட்டு சிறப்புப் பட்டிமன்றம்  

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
வெளிநாடு வாழ் தமிழர்கள் தாய் மொழியையும் தலைமுறை பெருமையையும் வளர்க்கிறார்களா? பன்னாட்டு சிறப்புப் பட்டிமன்றம்  

வலைதமிழ் டிவி வழங்கும் பன்னாட்டு சிறப்புப் பட்டிமன்றம் நவம்பர் 28 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வெளிநாடு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா? என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பட்டிமன்றம் சூம் செயலி வழியாக நடைபெற உள்ளது. இதன் நடுவராக சிங்கப்பூரில் இருந்து முனைவர் ராஜி ஸ்ரீனிவாசன் செயல்பட உள்ளார்.

'வளர்க்கவில்லை' என்ற தலைப்பில் சவுதியில் இருந்து முனைவர் பாக்யலக்ஷ்மி வேணு, அமெரிக்காவின் அட்லாண்டாவில் இருந்து திருமதி ஜெயா மாறன், நியூஜெர்சியில் இருந்து பிரபு சின்னத்தம்பி ஆகியோர் பேச உள்ளனர்.

'வளர்க்கிறார்கள்' என்ற தலைப்பில் ஹாங்காங்கில் இருந்து முனைவர் சித்ரா, சுவிட்சர்லாந்தில் இருந்து திருமதி.மதிவதனி (வானமதி), கத்தாரில் இருந்து மகாதேவன் ஆகியோர் வாதிட உள்ளனர்.

இணையவழியில் நடைபெறும் இந்த சிறப்புப் பட்டிமன்றம் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கும், சிங்கப்பூர் நேரப்படி இரவு 8 மணிக்கும், ஹாங்காங் நேரப்படி இரவு 8 மணிக்கும், கத்தார் நேரப்படி பகல் 3 மணிக்கும், அமெரிக்காவின் கிழக்கு பிராந்திய நேரப்படி காலை 8 மணிக்கும், சவுதி நேரப்படி பகல் 3 மணிக்கும், சுவிட்சர்லாந்து நேரப்படி பகல் 1 மணிக்கும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி வலைத்தமிழ் டிவியின் www.ValaiTamil.Tv or www. YouTube.com/ValaiTamil, or www. FB.com/ValaiTamil முகநூல் மற்றும் யூட்யூப் தளங்களில் நேரலை செய்யப்பட உள்ளது.

மூலக்கதை