'லாபம்' படக்குழு அலட்சியம்!

தினமலர்  தினமலர்
லாபம் படக்குழு அலட்சியம்!

ஜனநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிக்கும், லாபம் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது.படப்பிடிப்பு தளத்தில், விஜய் சேதுபதியை பார்க்க ரசிகர்கள் பலர், முக கவசம் கூட அணியாமல் குவிகின்றனர். விஜய் சேதுபதியும் அவர்களுடன் கைகுலுக்கி, கொரோனா அச்சமின்றி பழகுவதால், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதனால், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதில், லாபம் படக்குழு மெத்தனம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

மூலக்கதை