பைடன் நிர்வாகத்தில் மற்றொரு இந்தியருக்கு முக்கிய பதவி?

தினமலர்  தினமலர்
பைடன் நிர்வாகத்தில் மற்றொரு இந்தியருக்கு முக்கிய பதவி?

வாஷிங்டன்: ஜோ பைடன் நிர்வாகத்தில் இந்தியாவை பூர்வீகமாக உடைய, நீரா டான்டனுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவை பூர்வீகமாக உடைய பலர், ஜோ பைடனின் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். துணை அதிபராக, கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார். கொரோனா தடுப்பு சிறப்பு குழுவின் துணைத் தலைவராக, டாக்டர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வரிசையில், வெள்ளை மாளிகையின், ஓ.எம்.டி., எனப்படும் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் இயக்குனராக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, நீரா டான்டன் நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

'லேடிஸ் ஸ்பெஷல்'


வெளியுறவுத் துறை முன்னாள் செய்தித் தொடர்பாளரான, ஜென் பிசாகிகை, 41, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக, ஜோ பைடன் அறிவித்துள்ளார். அத்துடன், ஊடகத் தொடர்பு பிரிவில், பெண்களை மட்டுமே நியமித்துள்ளார். பைடன் பிரசாரக் குழுவில் இடம்பெற்றிருந்த கேட் பெடிங்பீல்ட், வெள்ளை மாளிகையில், ஊடகப் பிரிவின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை