மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்களே... என்னுடைய பேரை சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா?... மம்தா பானர்ஜியின் மருமகன் தடாலடி பேச்சு

தினகரன்  தினகரன்
மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்களே... என்னுடைய பேரை சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா?... மம்தா பானர்ஜியின் மருமகன் தடாலடி பேச்சு

கொல்கத்தா: பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்களுக்கு, என் பேரை சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? என்று மம்தா பானர்ஜியின் மருமகன் தடாலடியாக பேசியுள்ளார். மேற்குவங்காளத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தை ேபார் தீவிரமடைந்துள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான எம்பி அபிஷேக் பானர்ஜி, கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘பாஜக, காங்கிரஸ் மற்றும் சிபிஐ (எம்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் என்னை ‘பைபோ’ (மருமகன்) என்று அழைக்கின்றனர். எனது பெயரான அபிஷேக் பந்தோபாத்யாய் (பானர்ஜி) என்று கூறமுடியாதா? பிரதமருக்கு கூட அவ்வாறு சொல்வதற்கு தைரியம் இல்லை. 2019 மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, என்னை குறிவைத்து பேசினார். எனக்கு எதிராக இவ்வாறு தலைவர்கள் பேசும் போதெல்லாம் நான் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன். எனவே, அவர்கள் என்னை ‘பைபோ’ என்று அழைப்பதை காட்டிலும், நேரடியாக எனது பெயரை சொல்லி அழையுங்கள். அவர்களுக்கு தைரியம் இருந்தால் எனது பெயரை சொல்லட்டும். சைகைமொழியில் பேசுவதற்கு பதிலாக, எனது பெயரை கூறுங்கள். எங்கள் மாநிலத்தை பொறுத்தவரை உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மாநில தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா போன்றோர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். எனவே, எனது பெயரை குறிப்பிட்டு அழைக்கவில்லை என்றால், மீண்டும் நீதிமன்றம் செல்வேன்.

மூலக்கதை