கடலில் விழுந்த மிக்-29 கே விமான உதிரிபாகங்கள் சிக்கின: விமானியை தேடும் பணி தீவிரம்

தினகரன்  தினகரன்
கடலில் விழுந்த மிக்29 கே விமான உதிரிபாகங்கள் சிக்கின: விமானியை தேடும் பணி தீவிரம்

புதுடெல்லி: கோவா கடலில் விழுந்த மிக் - 29 கே விமானத்தின் உதிரிபாகங்கள் சிக்கியது. இருந்தும் மாயமான விமானியை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் இருந்து மிக்-29கே ரக பயிற்சி விமானம் ஒன்று கடந்த 4 நாட்களுக்கு முன் புறப்பட்டு சென்றது. அதில் 2 விமானிகள் இருந்தனர்.  இந்நிலையில், விமானம் கடந்த 26ம் தேதி மாலை 5 மணியளவில் திடீரென அரபிக் கடலின் கோவா கடற்கரை பகுதியில் விழுந்தது. தகவலறிந்த வான் மற்றும் தரைவழி படையினர் மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் விமானி ஒருவர் மீட்கப்பட்டார்.  மற்றொரு விமானியை தேடும் பணி நடந்து வருகிறது. கடற்படையின் ஒன்பது போர்க்கப்பல்களும், 14 விமானங்களும் தேடுதல் பணிகளில்  ஈடுபட்டுள்ளன. இவை தவிர, கடற்படையின் வேகமான இடைமறிப்பு கப்பல்களும்  காணாமல் போன விமானத்தை தேடுகின்றன. இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு கோவா கடற்கரையில் காணாமல் போன  மிக் -29 விமானத்தின் சில உதிரி பாகங்களை இந்திய கடற்படை கண்டறிந்துள்ளது.  காணாமல் போன பைலட் கமாண்டர் நிஷாந்த் சிங் மற்றும் பயிற்சி விமானத்தை தேடும் பணி நடந்து வருவதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மாதவால்  தெரிவித்தார்.

மூலக்கதை