‘கொரோனா’ பிடியில் பாக்., வீரர்கள் | நவம்பர் 26, 2020

தினமலர்  தினமலர்
‘கொரோனா’ பிடியில் பாக்., வீரர்கள் | நவம்பர் 26, 2020

கிறைஸ்ட்சர்ச்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 6 பேருக்கு ‘கொரோனா’ வைரஸ் தொற்று உறுதியானது.

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று ‘டுவென்டி-–20’ (டிச. 18, 20, 22), இரண்டு டெஸ்ட் (டிச. 26–-30 மற்றும் 2021, ஜன. 3-7) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக 34 வீரர்கள் உட்பட 54 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியினருக்கு நியூசிலாந்து புறப்படுவதற்கு முன் லாகூரில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என்று உறுதியானது. கொரோனா அறிகுறி கண்டறியப்பட்ட பகார் ஜமான், அணியில் இருந்து விலகினார்.

இதனையடுத்து நியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியினர் கடந்த நவ. 24ல் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, நவ. 25ல் முதலாவது ‘கொரோனா’ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் 6 பேரும் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்திக் கொள்ளும் விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என பாகிஸ்தான் அணியினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை