அதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ஆய்வில் தகவல்

தினமலர்  தினமலர்
அதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ஆய்வில் தகவல்

வாஷிங்டன்: கொரோனாவுக்கான அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தங்கள் மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பிக்கிறது.


அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு நாளைக்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர்.
அமெரிக்காவில் மாடர்னா நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை 30 ஆயிரம் பேருக்கு சோதனை செய்ததில், 100 சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பித்துள்ளது.


மூலக்கதை