அமெரிக்காவில் தொடர்ந்து 27வது நாளாக 1 லட்சம் பேருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் தொடர்ந்து 27வது நாளாக 1 லட்சம் பேருக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடர்ந்து 27வது நாளாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பாதிப்பு மட்டுமல்லாமல், உயிரிழப்புகளிலும் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. அங்கு இதுவரை 1.37 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 2.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, அமெரிக்காவில் தொடர்ந்து 27வது நாளாக 1 லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்புகளால் மக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர்.

மூலக்கதை