தமிழகத்தில் மூன்று லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு பள்ளகிக்ல்வித்துறை திட்டம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழகத்தில் மூன்று லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு பள்ளகிக்ல்வித்துறை திட்டம்

தமிழகத்தில் மூன்று லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு பள்ளகிக்ல்வித்துறை திட்டம்

    கடந்த 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகம் முழுவதும், 15 வயதுக்கு மேற்பட்ட 1.24 கோடி பேர் முழுமையாக எழுதவும், படிக்கவும் தெரியாதவர்களாக உள்ளனர். கல்வியில் ஒட்டுமொத்த வளர்ச்சி நிலையை எட்ட வேண்டுமெனில் இவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவை வழங்க வேண்டும். இவர்களுக்கு எழுத்தறிவை வழங்கும் நோக்கில் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்’ என்று அத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை மாநில பள்ளசிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் செயல்படுத்தவுள்ளது. அதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் கற்போர் கல்வியறிவு மையங்களாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை