உலகில் வெறுப்புணர்வு அதிகரிக்கிறது- அமெரிக்கா, இஸ்ரேலை சாடும் ஈரான் அதிபர்

தினமலர்  தினமலர்
உலகில் வெறுப்புணர்வு அதிகரிக்கிறது அமெரிக்கா, இஸ்ரேலை சாடும் ஈரான் அதிபர்

டெஹ்ரான்: நேற்று ஈரான் பேராசிரியர் மோசென் ஃபக்ரிசதே தலைநகர் டெஹ்ரானில் தற்கொலைப் படையினரால் கொல்லப்பட்டார். டெக்ரான் பல்கலையில் இயற்பியல் பேராசிரியராகவும் ஈரான் நாட்டின் பாதுகாப்பு படை தலைவராகவும் அறியப்பட்ட மோசென் ஃபக்ரிசதே, நேற்று காலை கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மோசென் ஃபக்ரிசதே தனது குடும்பத்துடன் காரில் பயணித்து கொல்லப்பட்டபோது கொண்டிருந்தபோது நான்கு பேர் அவரது காருக்கு வெடிவைத்து கொன்றனர். இதன் பின்னணியில் அமெரிக்காவின் தாக்கம் இருக்கும் என்கிற ரீதியில் ஈரான் அதிபர் ஹசன் ரொஹானி சந்தேகிக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உலக அளவில் வெறுப்புணர்வு அதிகமாகி வருகிறது என்று அவர் கூறியுள்ளார். மறைமுகமாக அவர் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் இதன்மூலமாக சாடுகிறார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் புரட்சிகர ராணுவ படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டபோது கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

தற்போது ஈரான் அரசின் முக்கிய நபர் மீண்டும் கொல்லப்பட்டது அமெரிக்காவின்மீது ரொஹானி அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது மோசென் ஃபக்ரிசதே கொலை தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை