கொடைக்கானல்-பழநி ரோட்டில் ராட்சத பாறை சரிவு: 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தினமலர்  தினமலர்
கொடைக்கானல்பழநி ரோட்டில் ராட்சத பாறை சரிவு: 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்:கொடைக்கானல் -- பழநி ரோட்டில் நேற்று மதியம் 12:00 மணிக்கு கோம்பைக்காடு அருகே ராட்சத பாறை சரிந்து விழுந்தது. இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி - - கொடைக்கானல் இடையே 66 கி.மீ., தொலைவு உள்ளது. இந்த ஆபத்தான மலை ரோட்டில் சில தினங்களாக இரவில் மழை பெய்து வருகிறது. இதில் நேற்று மதியம் ராட்சத பாறை சரிந்து விழுந்தது. அப்போது வாகனங்கள் செல்லாததால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது. இதனால் பழநியில் இருந்து செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

சில வாகனங்கள் வத்தலகுண்டு வழியாக சென்றன.கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறை யினர் முதற்கட்டமாக சிறிது பாறையை அகற்றி இலகு ரக வாகனங்களை அனுமதித்தனர். மாலை 4:00 மணிக்கு பாறையை துளையிட்டு வெடி வைத்து தகர்த்தனர். அதன்பின் அவற்றை அப்புறப்படுத்தி வாகன போக்குவரத்து துவங்கியது.

இவ்வழித்தடத்தில் பல இடங்களில் அபாயகரமான பாறைகள் விபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அவைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பாதையில் செல்வோர் கவனமாக செல்லுமாறு நெடுஞ்சாலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மூலக்கதை