அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒரு மணி நேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.34 கோடியாக உயர்ந்துள்ளது. 2.7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 52 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்காவில் ஒரு நிமிடத்திற்கு 114 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் என்ற விகிதத்தில் உயிரிழக்கின்றனர்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவில் வருகிற 2021ம் ஆண்டு பிப்ரவரியில் கொரோனா பாதிப்புகளால் 5 லட்சத்து 11 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஒன்று கூடுவோரால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் எச்சரித்து உள்ளனர்.

மூலக்கதை