திருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம்

தினகரன்  தினகரன்
திருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம்

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், நேற்று முன்தினம் கவுசிக ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், பூதேவி, தேவி  மற்றும் ஆழ்வார்களுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம் விடிய, விடிய நடந்தது.இதற்காக நேற்று முன்தினம் இரவு அவர்கள் மேளதாளங்கள் முழங்க பெரிய பெருமாள் சன்னதி பகல்பத்து மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நள்ளிரவு 12 மணி முதல் ஆண்டாள், ரங்கமன்னார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு 108 பட்டுப்புடவைகள் அணிவிக்கும் வைபவம் துவங்கி அதிகாலை வரை நடந்தது. .

மூலக்கதை