மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை

தினமலர்  தினமலர்
மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை

மதுரை: மதுரையில் நேற்று (நவ. 27) இரவு 9 மணியளவில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.

கடந்த 26ம் தேதி அதிகாலை கொரோன புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் சென்னையில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது. ஆனால், மதுரை மாவட்டத்தில் புயல் கரை கடந்த போது மழைப் பொழிவு இல்லை.

இந்நிலையில் நேற்று இரவு (நவ.,27) இரவு 9 மணியளவில் மதுரை நகரின் பெரும்பாலானா பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பகல் வேளையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவு பெய்த மழை குளிர்ச்சியை கொடுத்தது.

நிவர் புயல் தற்போது ஆந்திராவில் நிலைகொண்டுள்ளதையடுத்து ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

மூலக்கதை