திமிங்கலமும் முதலையும் நேருக்கு நேர் சந்தித்தால்...

தினகரன்  தினகரன்
திமிங்கலமும் முதலையும் நேருக்கு நேர் சந்தித்தால்...

மெல்போர்ன்: கடலில் வாழும் ‘புல் ஷார்க்’ எனப்படும் சுறாக்கள் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவை. கடல் பகுதியில் மனிதர்களை கண்டால் சும்மா விடாது. இப்படிப்பட்ட ஆபத்தான சுறா, முதலையை நேருக்கு நேர் சந்தித்தால் என்னவாகும்? இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த செல்சியா, பிரைஸ் ஆகிய இருவரும் கண்டறிந்துள்ளனர். குன்னன்ரா என்ற இடத்தில் தங்களின் டிரோன் கேமராவை கடலின் மேல் நிலை நிறுத்தி, ஏதாவது விநோத சம்பவம் நடக்கிறதா என இவர்கள் கண்காணித்துள்ளனர். அப்போது, அங்கு 16 அடி நீள பெரிய முதலை ஒன்று நின்றிருக்க, அதனை நோக்கி புல் ஷார்க் வேகமாக வந்துள்ளது. சண்டைக்கு தயாராக சுறா வேகமாக முன்னேறி வர, முதலை அமைதியாக காத்திருந்தது. இரு ஆபத்தான விலங்குகளின் சண்டை சுவாரஸ்யமாக இருக்குமென எதிர்பார்த்த நிலையில், முதலையின் சைசை பார்த்த சுறா, சற்று தயங்கி தனது பாதையை மாற்றி நழுவியது. பின்னர், எதுவும் தெரியாதது போல வேறு வழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என நீந்தி மறைந்தது.  இந்த வீடியோ யூடியூப்பில் வைரலாகி உள்ளது.

மூலக்கதை