தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு

சென்னை: தங்கம் விலை இன்று 5வது நாளாக தொடர்ந்து குறைந்துள்ளது. இன்று காலை சவரனுக்கு ரூ. 296 குறைந்து 36,608க்கு விற்பனையானது.

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தங்கம் விலை உச்சத்தை தொட்டது. சாதாரண மக்கள் நகை வாங்க முடியுமா? என்ற அளவுக்கு தங்கம் விலை கடும் ஏற்றம் கண்டது.

இது நகை வாங்குவார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ஒரு சவரன் ரூ. 43,328க்கு விற்கப்பட்டது.

இது தங்கம் விலை வரலாற்றின் அதிகப்பட்ச விலை ஆகும்.

அதன் பிறகு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக காணப்பட்டது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது.

அதே நேரத்தில் குறையும் நிலையும் இருந்து வந்தது. இந்நிலையில் இம்மாதம் தொடக்கத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2ம் தேதி ஒரு சவரன் ரூ. 38,072க்கு விற்கப்பட்டது.

அதன் பிறகு விலை ஏறியும், இறங்கியும் இருந்து வந்தது. கடந்த 23ம் தேதி ஒரு சவரன் ரூ. 37,984, 24ம் தேதி ரூ. 37,120க்கும் விற்க்கப்பட்டது.

கடந்த 24ம்தேதி விலை குறைந்து கிராமுக்கு ரூ. 26 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,614க்கும், சவரனுக்கு ரூ. 208 குறைந்து ஒரு சவரன் ரூ. 36,912க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று 4வது நாளாக தங்கம் விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ஒரு கிராம் ரூ. 4,613க்கும், சவரனுக்கு ரூ. 8 குறைந்து ஒரு சவரன் ரூ. 36,904க்கும் விற்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இன்று 5வது நாளாக மீண்டும் தங்கம் விலை குறைந்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

அதாவது, இன்று காலை ஒரு கிராமுக்கு தங்கம் விலை ரூ. 37 குறைந்து ஒரு கிராம் 4576க்கும், சவரனுக்கு ரூ. 296 குறைந்து ஒரு சவரன் ரூ. 36,608க்கும் விற்கப்பட்டது.

தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவதாலும்.

கடந்த 4 மாதங்களில் சவரனுக்கு ரூ. 6720 என்ற அளவில் விலை குறைந்திருப்பதால் நகை கடைகளில் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.   இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் கூறி வருவதால் தங்க நகைகள் வாங்க பலர் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை