தெ. ஆப்ரிக்கா- இங்கி. மோதல்

தினகரன்  தினகரன்
தெ. ஆப்ரிக்கா இங்கி. மோதல்

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தலா 3 டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. தென் ஆப்ரிக்கா அணி சுமார் 7 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் விளையாடுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலும் இங்கிலாந்து அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இரு அணிகளு–்ம கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 3ல் இங்கிலாந்தும், 2ல் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. டி காக் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணியில் டு பிளெஸ்ஸி, தெம்பா பவுமா, டேவிட் மில்லர், லுங்கி என்ஜிடி, ஆன்ரிச் நார்ட்ஜ், காகிசோ ரபாடா என நட்சத்திர வீரர்கள் கலக்க காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் இங்கிலாந்தும் தனது வெற்றி அனுபவத்தை தொடர காத்திருக்கிறது.

மூலக்கதை