2025க்குள் விண்வெளி குப்பைகளை அகற்ற ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் ஒப்பந்தம்

தினமலர்  தினமலர்
2025க்குள் விண்வெளி குப்பைகளை அகற்ற ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் ஒப்பந்தம்

லண்டன்: கிளியர் ஸ்பேஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தோடு ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி 102 மில்லியன் டாலர் ஒப்பந்தம் இட்டுள்ளது. விண்வெளியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய இந்த ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பல ஆண்டுகளாக மனிதர்கள் விண்வெளியில் ராக்கெட்டுகளை ஏவி வருகின்றனர். செயற்கைக்கோள்களை புவி வட்டப் பாதையில் செலுத்திவிட்டு ராக்கெட்டுகள் கழன்றுவிடும். இவை விண்வெளியில் மிதந்து வருகின்றன. இதேபோன்று பால்வீதியில் மனிதர்கள் பல விண்வெளி தொழில்நுட்ப குப்பைகளை விட்டு வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த முதல்நிலை துவக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான கிளியர் ஸ்பேஸ் உடன் இந்த ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டு விண்வெளி குப்பைகளை அகற்ற இதற்காகவே பிரத்தியேகமாக ஓர் ஸ்பேஸ்கிராப்ட் தயாரிக்கப்பட உள்ளது.

விண்வெளி குப்பைகளை விண்ணில் இருந்து பூமிக்கு கொண்டு வர இந்த ஸ்பேஸ்கிராப்ட் உதவும். விண்வெளி சென்ற விண்வெளி வீரர்களின் மூக்குக் கண்ணாடிகள் துவங்கி பெரிய செயற்கைக் கோள்கள்வரை பூமியை சுற்றி ஏகப்பட்ட விண்வெளிக் குப்பைகள் சுழன்று கொண்டிருக்கின்றன.


இது குறித்து விஞ்ஞானிகள் காலகாலமாக எச்சரிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்த குப்பைகளை வெஸ்பா பேலோட் அடாப்டர் என்கிற கருவி பூமிக்கு தனது காந்த சக்தி மூலம் ஈர்த்து கொண்டு வரும்.

இதனால் புவி வட்டப் பாதை சுத்தமாகும் என நம்பப்படுகிறது. உலகிலேயே முதன்முறையாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவை வியப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.

மூலக்கதை