சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரியில் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரியில் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

சென்னை: சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரியில் மு. க. ஸ்டாலின் இன்று காலை ஆய்வு நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

‘நிவர்’ புயல் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மழை நீரால் சூழ்ந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்கள் மழைநீரால் சூழ்ந்துள்ளது.

பல இடங்களில் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை திரு. வி. க. நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்கினார். இந்த நிலையில் 2வது நாளாக இன்று காலை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் சைதாப்பேட்டை பகுதியில் ஆய்வு நடத்தினார்.

தொடர்ந்து, சைதாப்பேட்ைட ஆட்டுதொட்டி, செட்டி ேதாப்பு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு நடத்தினார்.

அதன்பிறகு சைதாப்பேட்டை திடீர் நகர் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் எம். ஜிஆர். நகர் பள்ளியில் தங்க வைக்கப் பட்டிருக்கும் சூளை பள்ளத்தை சேர்ந்த 500 குடும்பங்களுக்கும் உதவி பொருட்களை மு. க. ஸ்டாலின் வழங்கினார். இதை முடித்து கொண்டு வேளச்சேரி பகுதியில் பார்வையிட்டு விஜய் நகரில் 500 குடும்பங்களுக்கு உதவி பொருட்களை மு. க. ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து சோழிங்கநல்லூர் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு உதவி பொருட்களை மு. க. ஸ்டாலின் வழங்கினார்.

ஆய்வின் போது சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா. சுப்பிரமணியன் எம்எல்ஏ, தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

.

மூலக்கதை