சுதந்திர தின கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்கத் தேவையில்லை

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சுதந்திர தின கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்கத் தேவையில்லை
     நாட்டில் சுதந்திர தினம் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த விழாவில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமென மத்திய அரசு தனது கடிதத்தின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. எனவே காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மட்டும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிகழ்வை நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
     கரோனா நோயத் தொற்று காரணமாகக் குழந்தைகள், பள்ளி மாணவர்கள் பொதுக் கூட்ட நிகழ்வில் பங்கேற்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பள்ளி மாணவர்கள், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை இந்த ஆண்டு நடத்த வேண்டிய தேவையில்லை.
மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் 500க்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் பொதுத் துறை முதன்மைச் செயலாளர் பி. செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.       

மூலக்கதை